தமிழீழ – நாட்டுப்பண்
வான்முட்டும் எழில்கொண்டு வளமாகவும் - இன்பத் தேன்சொட்டும் தமிழ்சேர்ந்து நலமாகவும்
யாழ்ப்பாண நகரோடு பெரும்கல்வியும் - எம்மை வாழ்விக்க உணவூட்டும் திருவன்னியும்
மட்டு வாவிக்குள் மீன்பாடும் இசை சந்தமும் - வெற்றி மேவும் வெண் தீவெங்கும் உயிர் சொந்தமும் கிளிநொச்சி வளமுல்லை அம்பாறையும், தெள்ளத் தெளிந்தோடும் பொன்னருவி ஆற்றோரமும்
சூழ்கொண்ட மன்னாரின் முத்தாரமும் - எங்கும் சுடரேற்றும் திருகோண
மலை மொத்தமும்
நாளும் நிலை உயர்வாக செயலாற்றுவோம் - எங்கள் ஈழத்தமிழ் திருநாட்டின் புகழ்போற்றுவோம்
வாழிய வாழிய வாழியவே எங்கள் ஈழத் தமிழ்த் திருநாடு வாழியவே!