ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

தீரன் சின்னமலை எனும் வீர வரலாறு


                                                               
இந்திய சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்திலிருந்து தீவிரம் அடைந்தாலும், அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப்பட்டன. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும் விடுதலை வேள்வியில் பங்கேற்ற‌வர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளையர்கள், இந்தியாவில் சிதறுண்டு கிடந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் பார்த்து வியாபார வலை வீசினார்கள். வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்து பின்னால் நம் தேசத்தையே சூறையாடப் போவது தெரியாமல் அரசர்களும் குறுநில மன்னர்களும் அவர்களுக்கு ஆதரவு தந்தனர். எந்தச் சூதும் அறியாத அப்பாவி இந்தியப் பிரஜைகள் கிழக்கிந்தியக் கம்பெனியிலேயே பணியில் சேர்ந்து, வெள்ளையர்களுக்கு மறைமுகமாக உதவினர். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட வெள்ளையர்கள், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை வளைத்து சுர‌ண்டத் தொடங்கி, இறுதியாக நம்மையே அடிமைப்படுத்தினார்கள்.
இந்தச் சூழலை உணர்ந்து, பொறுக்க முடியாமல் ஆர்ப்பரித்த வீரர்களில் ஒருவன் தீரன் சின்னமலை. கொங்கு நாட்டில் எண்ணற்ற வீர இளைஞர்கள் வளர வித்திட்டவர் தீரன் சின்னமலை. வரலாற்று வீரனான தீரன் சின்னமலைக்கு இந்த இணையதளம் சமர்ப்பிக்கப்படுகிறது.
"மாபெரும் போர் வீரன் - கொங்கு
மண்ணுக்கு அதி காரன் - அந்த
நாளில் ஆங்கில ஆதிக்கம் எதிர்த்த
நாயகன் சின்னமலை - அவன் போல்
நாட்டில் எவருமில்லை!"
"ஊருக்குத் தெரியாது - இந்த
உலகமும் அறியாது - எங்கள்
தீரன் சின்னமலை சரித்திரம் என்பது
வாள்முனை  யின்பாட்டு - வெற்றி
வேலின் விளை யாட்டு!"
"பாளையக்காரரை ஒன்றினைத்தே - நல்ல
பட்டாள வீரரை முன்னிறுத்தி
கோழைத் துரையின் தலையினைக் கொய்ததில்
குங்குமம் இட்டவன் சின்னமலை!"
"மேழி பிடித்துழுவார் - இந்த
மேதினி பசிதீர்ப்பார் -  கொங்கு
வேளாளர் இனத்தில் சர்க்கரை  மரபில்
பிறந்த ஒளிக்கீற்று - சீறி
வெடித்த புயல் காற்று!"
"கொங்கினை ஆளப் பிறந்தவனாம் - செழுங்
கோவைக் கோனாகச் சிறந்தவனாம்
சிங்க மெனவெள்ளைக் கும்பலில் பாய்ந்திடும்
சின்ன மலைபுகழ் பாடிடுவோம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக